top of page
எந்தன் வாழ்வில் உந்தன் வாசம்
  • எந்தன் வாழ்வில் உந்தன் வாசம்

    ₹270.00Price

    மணமேடையில் சைத்ரிகா அமர்ந்திருக்க, அவள் மடியில் நான்கு வயதே ஆன அவளுடைய செல்ல மகள் ஜனுத்துயா பட்டுப் பாவாடை சரசரக்க அமர்ந்திருந்தாள். அருகில் உதய்கிருஷ்ணா என்கின்ற உதய் மணக்கோலத்தில் அமர்ந்திருந்தான். ஐயர் சொல்லும் எல்லா மந்திரங்களையும் கடனே என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

    அவனுடைய இறுக்கமான முகமும் விரக்தி நிறைந்த குரலில் வெளிவந்த மந்திரங்களுமே சொல்லியது, இப்படி ஒரு கல்யாணத்தை அவன் கனவில் கூட நினைத்துப் பார்க்க வில்லை என்பதை. 

    ஐயர் மந்திரங்களை முடித்துக் கொண்டு தாலி எடுத்துக் கொடுக்க, யாரையும் பார்க்க விருப்பப் படாமல் கடனே என்று தன் அருகில் தங்கச் சிலை போல் அமர்ந்திருந்த, தன் மாமா மகள் கழுத்தில் தாலியைக் கட்டினான் உதய்.

    அந்தத் தாலி கழுத்தில் ஏறும் போதே அவன் கை உணர்ந்தது அவள் எப்படிப் பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறாள் என்பதை. தன் வாழ்க்கையே தன் இஷ்டப்படி இல்லாமல் இருக்கும் போது, அவளுக்கு மட்டும் எப்படி இருக்கும் என்று நினைத்து  தன் கடமையைச் செய்தவன், திரும்பித் தன் குடும்பத்தைப் பார்த்தான்.

    தன்னைச் சுற்றி உள்ள அனைவரின் முகத்திலும் சந்தோஷம் இருக்கிறதோ இல்லையோ! நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.
     

    • Book Details

      Language - Tamil

      Page count - 148

      Genre - Literature & Fiction

      Binding Type - Paperback

       

    • Book Publisher

      Copyright © Kavitha Anbuselvan
      All Rights Reserved.


      Made with ❤ on the Notion Press Platform
      www.notionpress.com

    bottom of page