top of page
நிழலில் ஆடும் நித்திலமே
  • நிழலில் ஆடும் நித்திலமே

    ₹250.00Price

    அவளுக்கு அப்போது தான் இங்கே நமக்குத் தனி அறை இல்லையே என்ற நினைவே வந்தது. சூர்யா அறையிலே தான் தங்கனும் இப்ப என்ன பண்றது, நாம போனால் எதாவது சொல்வான் என்று தயக்கத்துடன் அவன் அறைக்குச் சென்றாள்.

    அவளைப் பார்த்ததும் என்ன என்பது போல் புருவத்தை உயர்த்த,

    "எனக்கு வேற அறை இல்லை இங்க தான் தங்கனும்" என்றாள் மெல்லிய நடுக்கத்துடன்.

    "பின்ன உனக்கு போற இடமெல்லாம் தனியா சொகுசு ரூம் தருவாங்கன்னு நினைச்சியா? இந்தா" என்று போர்வையும் தலையணையும் தூக்கிப் போட்டவன், "இந்த ரூம்ல ஓரமா படுத்துத் தூங்கு என் நேரம் உன்னை எல்லாம் என் ரூம்ல விடனும்னு இருக்கு" என்று பொருமி விட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

    மதுவுக்குச் சங்கடமாக இருந்தது. அதே சமயம் கோபமும் வந்தது. இவன் பொண்டாட்டி இவன் ரூம்ல தூங்காம பக்கத்து ரூம்லையா தூங்க முடியும். நான் இவன்கிட்ட சொகுசு பங்களா கேட்ட மாதிரி என்ன பேச்சு பேசுறான். வெளியில் தூங்கினா இவனுக்குத் தானே கெட்ட பேரு? அது கொஞ்சமாவது இவன் புத்திக்கு உரைக்குதா? என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டு, போட்டிருந்த குர்தீஸைக் கூட மாற்றாமல் போர்வையை விரித்துப் படுத்துக் கொண்டாள்.
     

    • Book Details

      Language - Tamil

      Page count - 128

      Genre - Literature & Fiction

      Binding Type - Paperback

    • Book Publisher

      Copyright © Kavitha Anbuselvan
      All Rights Reserved.


      Made with ❤ on the Notion Press Platform
      www.notionpress.com

    bottom of page