top of page
பாவையின் விழிகளும் மொழி பேசுமே
  • பாவையின் விழிகளும் மொழி பேசுமே

    ₹300.00Price

    மதி அப்பாவைப் பார்க்க சிட்டாகப் பறந்தாள். கோபி மருமகனிடம்  சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவர், தயக்கத்துடன் நின்று கொண்டிருந்த மகளைப் பார்த்ததும், "என் செல்லக் குட்டி வாடா வாடா" என்று கை விரித்தார். 

    "அப்பா" என்று நீட்டிய கைக்குள் புகுந்து கொண்டவள், அவரை அணைத்துக் கொண்டு மார்பில் சாய்ந்தவள், "நீங்க இப்ப எல்லாம் என்னை நினைக்கறதே இல்லை அப்பா" என்றாள்.

    மனைவியின் இந்த குழந்தை முகத்தை தான் முதல்முதலாக ரசித்து விரும்பினான். இப்பவும் அதே முகம் அவன் மனதில் இருந்த கோபத்தை குறைத்து அவள் மேல் பித்தாக்கியது.

    அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். மதி அப்பா தோளில் சாய்ந்த படியே கணவனைப் பார்க்க, அவன் பார்வை தன் மேல் நிலைத்து நிற்பதைப் பார்த்து அவள் விழிகள் மின்னியது.

    தன்னை கண்டுகொண்டால் என்பதை அறிந்தவன், முகத்தைத் திருப்பிக் கொண்டான். அதில் மீண்டும் மனம் சோர்வுற்றவள், "அப்பா நான் போய் ரெடியாகிட்டு வரேன்" என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குச் சென்றாள்.
     

    • Book Details

      Language - Tamil

      Page count - 166

      Genre - Literature & Fiction

      Binding Type - Paperback

    • Book Publisher

      Copyright © Kavitha Anbuselvan
      All Rights Reserved.

      Made with ❤ on the Notion Press Platform
      www.notionpress.com

    bottom of page